யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.3.2026) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வனஜீவராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அந்தப் பிரதேசங்களில் இதுவரை யானைகள் அங்கு காணப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விடப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
