சற்று முன் கிடைக்கப் பெற்ற சடலம்

 

வவுனியா - இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாகவும், அது சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடைய சாதாரண உடல்வாகு கொண்ட ஒரு ஆணின் சடலம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 


இரட்டை பெரியகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி - 071-8591344 


இரட்டை பெரியகுளம் பொலிஸ் நிலையம் - 024-2223532