அதிரடியாக குறைக்கப்பட்ட தங்கம் விலை

 


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று (12) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

எனினும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.