அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவது மற்றும் அது தொடர்பான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை கோருவது குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள இரண்டாவது பயனாளர் பெயர்ப்பட்டியல் இன்று (27) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்தப் பெயர்ப்பட்டியல் தொடர்பாக ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)