பண்டாரவளை பகுதியில் இன்று (27) குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பாடசாலை மாணவர்கள் பண்டாரவளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை காவல்துறை தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென களைந்த குளவிகள் மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
