மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறி்த்து இன்று(17.3.2026) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் நிலவும் அதிக மின்சாரத் தேவையைக் குறைக்கும் பொருட்டு இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
