சற்று முன் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர

 


சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.


குறிப்பாக மத்தியகிழக்கு யுத்தம் குறித்தும் அதில் இலங்கையின் நடுநிலை போக்கு தொடர்பிலும் விளக்கியுள்ளார்.


அத்தோடு இலங்கையின் கடல் எல்லையில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல் தொடர்பிலும் விளக்கியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.


அவர் இன்றைய தினம் நாடாளுமன்றில் இன்னும் சற்று நேரத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.


மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதனைத் தெரிவித்திருந்தார்