எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சம்பா மற்றும் கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சம்பா மற்றும் கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறையாக உள்ள ஏனைய தானியங்களையும் இறக்குமதி செய்வதை உணவுப் பாதுகாப்புக்கான ஜனாதிபதி குழு உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார்.