திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி!

 


திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனக்குடா பகுதியில் (ரயில் கடவைக்கு அண்மையில்) நேற்று (17-03-2026) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த மர்சூத் முகமட் சப்ரின் என்ற 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைச் சீனக்குடா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.