யாழில் சற்று முன் அதிர வைத்த திருட்டு சம்பவம்

 


யாழில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். குற்றத்தடுப்புப் காவல்துறையினரால் நேற்றையதினம் (27-03-2026) நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த பகுதியில் வசிக்கும் கணவனும் மனைவியும் பணி நிமித்தம் பகலில் வீட்டில் இருப்பதில்லை.

அதனால் வீட்டைப் பராமரிப்பதற்கெனப் பணிப்பெண் ஒருவரைச் சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், வீட்டிலிருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன.

இதையடுத்து, அந்த நகைகள் களவாடப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதன்பின்பு விசாரணைகளைத் துரிதகதியில் முன்னெடுத்த காவல்துறையினர், வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 53 வயதான பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.