உச்சம் தொட்ட அரிசி விலை


 நாட்டில் தற்போது நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளுக்கு நிகரான அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், உள்ளூர் சந்தையில் அரிசி விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக பொன்னி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை, இறக்குமதியாளர்கள் தலா 1,040 மெட்ரிக் டொன் வரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.