நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்க விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,175 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பல் நிலை காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதன் நேரடித் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் பிரதிபலிப்பதே இவ்வாறான ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், சர்வதேச சந்தையில் டொலரின் வலுவூட்டல் மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகள் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
