மின்தடை ஏற்படுமா? எரிசக்தி அமைச்சு விளக்கம்



நாட்டில் மின்சார விநியோகத்தில் தற்போது எந்தவிதப் சிக்கல்களும் அடையாளம் காணப்படவில்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 

மழைவீழ்ச்சிக் குறைவு மற்றும் நிலக்கரி இறக்குமதித் தாமதம் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மின்சார விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


குறிப்பாக, மின்சார வளங்களைச் சீராகப் பகிர்ந்தளிக்க QR குறியீடு அடிப்படையிலான முறைமை பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலக்கரித் தாமதம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த அவர், சில கப்பல்கள் மே 26 வரை கால அவகாசம் கோரியுள்ள போதிலும், ஏனைய நிலக்கரித் தொகுதிகள் ஏற்கனவே நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என அவர் உறுதிபடக் கூறினார்