அநுராதபுரம், மஹாவிளச்சிய - உளுக்குளம் பகுதியில் காட்டு யானை தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (18.03.2026) இடம்பெற்றுள்ளது.
உளுக்குளம், பேமடுவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தற்செயலாக யானையிடம் அகப்பட்டுக் கொண்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மஹாவிளச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் அண்மைக்காலமாக மனித - யானை மோதல்கள் அதிகரித்து வருவதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
