சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் சரிவை பதிவு செய்து வருகிறது.
அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்து விற்பனையாகிறது.
அதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 சதவீதம் வரை சரிந்து,
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும், அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
