சற்று முன் நடந்த பயங்கர நிகழ்வு

 


மினாப் பள்ளிமீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவரின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது.

இஸ்லாமிய குடியரசின் உச்சதலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது. இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும், பின்னர் பழைய அல்லது தவறான வரைபடத் தரவுகள் காரணமாக, அருகிலிருந்த இராணுவத் தளத்திற்குப் பதிலாகத் தவறுதலாகப் பள்ளி தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.