யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
