ஜனாதிபதி இன்றிரவு விசேட ஊடக சந்திப்பு - வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரை

 


நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (17) இரவு 7:30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்று இரவு 7:30 க்கு இடம்பெறவுள்ள ஊடக சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், அவர்களுக்கும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியினர் தமது கருத்துக்களை ஜனாதிபதி மட்டத்தில் முன்வைக்க விரும்பினால், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.