நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சோமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் (Air Conditioners) மாலை 3 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும். தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஒளிரும் விளம்பரப் பலகைகள் (Illuminated boards) மற்றும் திரைகளை இரவு 8 மணிக்குப் பின்னர் அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.