அரிசி இறக்குமதிக்கு ஏப்ரல் முதலாம் திகதி அனுமதி வழங்கினால், ஏப்ரல், 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அரசியை கொண்டு வர முடியுமென, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்தார்.
25 ஆம் திகதிக்கு முன்னரே அனுமதி வழங்கப்பட்டிருந்தால், தற்போது சந்தையில் அரசி கையிருப்பில் இருந்திருக்கும் எனவும் கணேஷ் விநாயகசுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உடனடியாக இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அரிசியின் விலையும் குறைவடையும் என அவர் கூறினார்.
