இடுகைகள்

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

 


அவுஸ்திரேலியா - விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சமிந்திகா இலங்கை பூர்வீகம் கொண்டவராகும்.