உச்சம் தொட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

 


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை காரணமாக நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்களும் விநியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் - சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்ச் சூழலின் தாக்கத்தால் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.

இத்தகைய பின்னணியில், நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.

முன்னர் ரூ. 230 முதல் 240 வரை விலை இருந்த ஒரு கிலோ பருப்பு, தற்போது ரூ. 310 முதல் 315 வரை விற்கப்படுவதாக தம்புள்ளையில் உள்ள தனியார் மொத்த விற்பனைச் சந்தை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில சந்தைகளில் ஒரு கிலோ பருப்பு ரூ. 350 முதல் 360 வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.