சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கவிலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்போது அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,413.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.23 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதனடிப்படையில் இன்று மாத்திரம் இலங்கையிலும் தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
