நாடு இருளிலா? எரிபொருள் கையிருப்பில் இல்லையா?

 




அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு சூடான் மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

ஈரான் - அமெரிக்க மோதலால் ஏற்பட்டுள்ள இந்த எரிசக்தி தட்டுப்பாடு, ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் பொருளாதார ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது 

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில் (Juba) சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் 96% மின்சாரம் எண்ணெயைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதி பாதிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், எண்ணெய் இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கும் தீவு நாடான மொரிஷியஸில், அடுத்த 21 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் 'எரிசக்தி அவசரநிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்து.

சிங்கப்பூரிலிருந்து மாற்று எரிபொருளைப் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதன் விலை மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஷிம்பாப்வே தனது பெட்ரோலில் எத்தனால் கலப்பை 5% லிருந்து 20% ஆக உயர்த்தியுள்ளதுடன், எரிபொருள் மீதான வரிகளையும் இரத்து செய்துள்ளது.

எத்தியோப்பியாவில் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கென்யாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் பீதியில் முண்டியடித்து வாங்குவதால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேநேரம், செங்கடல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்துவிட்டு ஆப்பிரிக்காவின் 'நன்னம்பிக்கை முனை' (Cape of Good Hope) வழியாகக் கப்பல்கள் செல்வதால், தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.