தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மரக்கறிகளின் விலை சமீப காலத்தில் ஏற்ற இறக்கத்தை பதிவு செய்து வருகிறது.
தம்புள்ளை, நுவரெலியா, கெப்பட்டிபொல, யாழ்ப்பாணம் மற்றும் தம்புத்தேகம ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் இன்று விற்பனை செய்யப்படுகின்ற மரக்கறிகளின் விலைப்பட்டியலுக்கமைய,
ஒரு கிலோகிராம் கரட் நுவரெலியாவில் 330 ரூபாய்க்கும் கெப்பட்டிபொலயில் 230 ரூபாய்க்கும் யாழ்ப்பாணத்தில் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோகிராம் தக்காளி நுவரெலியாவிலும் கெப்பட்டிபொலயிலும் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோகிராம் தக்காளி நுவரெலியாவிலும் கெப்பட்டிபொலயிலும் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவிலும் யாழ்பாணத்திலும் 140 ரூபாய்க்கும் கெப்பட்டிபொலயில் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு யாழ்பாணத்தில் 165 ரூபாய்க்கும் நுவரெலியாவில் 270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் யாழ்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

