மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை- மனித மோதல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கனள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

மட்டக்களப்பு - மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் வியாழக்கிழமை(19.03.226) இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்குத் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர், இராணுவத்தினர் மாந்தீவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகளை களத்தில் நின்று காட்டு யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தக் காட்டுயானைகள் வவுணதீவு, ஆயித்தியமலை பிரதேசம் முழுவதும் உணவுதேடி சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது யானை மனித மோதலை தொடர்ந்து மாந்தீவு நிலப்பரப்பிற்குள் சஞ்சரித்த காட்டு யானை கூட்டத்தை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்த போதும் யானைக் கூட்டம் மாந்தீவு பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் முதல் நகர் பகுதி வரைக்கும் தற்போது காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோஸ்தர்கள், பொதுமக்களை கட்டுப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் பணியினை முன்னெடுக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.