உலக சந்தையில் நேற்று பதிவான தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை நேற்றைய நிலையிலேயே இன்றும் தொடர்கிறது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,278 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 93.72 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இலங்கையில் நேற்று மாத்திரம் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு காணப்பட்டது. குறிப்பாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கம் 410,000 ரூபாய்க்கும், 22 கரட் ஒரு பவுண் தங்கம் 379,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் கருதப்படுவதால், அதன் விலை இந்த வரலாற்று உச்சத்தில் காணப்படுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
