மின் கட்டணம் 8 வீதம் முதல் 10 வீதம் வரை உயரும் - ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

 


அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார முகாமைத்துவம் மற்றும் எதிர்வரும் மின்சாரக் கட்டண உயர்வு குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து அனைவருக்கும் சலுகை வழங்குவதை விட, அந்தப் பணத்தை அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


அரசாங்கத்தின் திறைசேரியிடம் தற்போது 1 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் உள்ள நிலையில், அதில் ஒரு பகுதியைச் சாதாரண மக்களின் நலனுக்காக ஏன் ஒதுக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.


கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு நாட்டில் வறுமை அதிகரித்து வருவதாகவும், அதற்கு இந்த அரசாங்கத்திடமும் முறையான தீர்வுகள் இல்லை என்றும் அவர் சாடினார்.