ஈரானின் 3-வது உச்ச தலைவராக ஆயத்துல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி காமேனி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்

 


இஸ்லாமியக் குடியரசின் புனிதக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்குப் பதிலடி கொடுக்கவும், ஈரானின் 3-வது உச்ச தலைவராக ஆயத்துல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி காமேனி (Ayatollah Seyyed Mojtaba Hosseini Khamenei) அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஈரானின் 88 மூத்த மதகுருக்களைக் கொண்ட நிபுணர்கள் குழு (Assembly of Experts), தற்போதைய போர்க்காலச் சூழலையும் தேசத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் இலட்சியங்களை நிலைநிறுத்தவும், தியாகி அலி காமேனி அவர்களின் பணிகளைத் தொடரவும் மொஜ்தபா காமேனி அவர்கள் மிகவும் தகுதியானவர் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் பொதுமக்கள் புதிய தலைமைக்குத் தங்களின் முழுமையான விசுவாசத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மை புதிய தலைமையின் கீழ் மேலும் வலுவடையும் என ஈரானிய அரசுத் தொலைக்காட்சி உறுதிப்படத் தெரிவித்துள்ளது.