உச்சகட்ட திமிருடன் பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வச்சிக்காதீங்க!

 


பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நடச்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கி தொடர்பு காணப்படும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே உச்சகட்ட திமிருடன் நடந்துக்கொள்வார்களாம்.

இவர்கள் யாருக்காகவும் தங்களின் சுய கௌரவத்தை இழந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்களாம்.அப்படி திமிருக்கு மறு பெயராக விளங்கும் பெண் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.


மேஷம்


மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் துணிச்சலான மற்றும் ஆதிக்கம் செலுத்தும் குணத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.


இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தாங்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இயல்பாகவே மற்றவர்களை நொடியில் கவரும் வசீகர தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.இவர்களின் அதீத தன்னம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுக்காத இயல்பு மற்றவர்களுக்கு பார்வையில் இவர்களை திமிர் பிடித்தவர்களாக காட்டுகின்றது.


தனுசு

தனுசு ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், நம்பிக்கையூட்டும் மனப்பான்மை கொண்டவர்களாகவும், உற்சாகமானவர்களானவும், வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர்கொள்ள எப்போதும் தயாரானவர்களாகவும் இருப்பார்கள்.


இவர்களுக்கு கடிகமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும், நிதானமானவும் கடக்கும் ஆளுமையானது பிறப்பிலேயே இருக்கும்.


இவர்கள் மனநிலையில், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட கட்டுப்படுத்தல்களுக்கு உட்படுவதையும் விரும்வே மாட்டார்கள். இந்த குணம் இவர்களை திமிர் பிடித்தவர்களாக தோன்ற செய்கின்றது.


சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் இயல்பிலேயே திமிரான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களை பொருத்தவரையில் ஒரு இடத்தில் தலைமை வகிக்க முடியவில்லை என்றால் அந்த இடத்தில் இருப்பதே வீண் என்ற குணம் நிச்சயம் இருக்கும்.


ஒரு சிங்கத்தைப் போல் நேர்மையாக இருக்கும் அதே நேரம் தங்களின் இடத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத ஒரு மூர்க்கத்தனமான திமிர் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.