ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் தான் கிரகணம் எனப்படுகின்றது.
கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எப்படி 12 ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அது போல் கிரகணங்களும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.
குறித்த கிரகணத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சில சாதக, பாதக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் அசுபமான பலன்களை கொடுக்கப்போகின்றது.
கணிப்பின் பிரகாதரம் ஜோதிட நிபுணர்களால் எச்சரிக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சந்திர கிரகணமானது சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் பாதக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்டுகின்றது. இவர்களின் புதிய முயற்சிகள் படுதோல்வியடையும்.
தொழில் விடயங்களில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதால் பணியிடத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் சண்டை சச்சரிவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த ராசியினர் அவதானமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குறித்த சந்திர கிரகணத்தால் பொருளாதார நெருக்கடி அதிகரித்து மனரீதியிலும் பாரிய அழுத்தத்தை கொடுக்கும்.
வியாபாரத்தில் திடீர் இழப்புகளை சந்திக்கவேண்டி ஏற்படலாம். மற்றும் தொழில் ரீதியிலும் பாதிப்புகளை சந்திக்க வாய்புள்ளது.
தொழிலில் ஈடுபடுவோர் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
கும்பம்
சனி கிரகத்தால் ஆளப்படும் கும்ப ராசியினருக்கு குறித்த சந்திர கிரனணத்தின் பாதிப்பு மற்ற ராசியினரை விட சற்று அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக தொழில் விடயங்களில் ஏற்படும் மாற்றங்களால் குடும்பத்திலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பணவரவில் பாரிய வீழ்ச்சியை சந்திக்கப்போகின்றார்கள். இவர்களின் மனநிலையும் மிகவும் சோர்வாக இருக்கும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும்.
