2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்
மேலும், 01.04.2026 (இன்று) முதல் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு http://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்தினூடாக பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இதே இணையத்தளத்தினூடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
.jpeg)