பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த திட்டத்தின் மூலம், சுமார் 89 இலட்சத்து 3,75 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)