திருமண வலையில் சிக்கிய வேடன்!

 


ரெப் பாடல்களை எழுதி, தானே பாடி, வெளியிட்டு, உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இலங்கையரின் திருமணம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இளம் இசை கலைஞர்களில் முக்கியமான ஒருவராக திகழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வேடன் எனும் ஹிரன்தாஸ் முரளியின் திருமணம் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சமூக அக்கறை, அரசியல் நுணுக்கம், தெரு வாழ்க்கையின் உண்மை முகம், இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வரிகள் என அனைத்தையும் கலந்து தனது பாடல்களை உருவாக்கும் திறமையால், மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி அடையாளத்தை அவர் கட்டியெழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் அளவில் கவனம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' பாடல் வேடனின் இசைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. இந்த பாடல் அவரை திரை இசை ரசிகர்களிடமும் பரவலாக அறிமுகப்படுத்தியது.

இவ்வாறு இசையில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேடன், தற்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டமாக திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார்.

அவரின் நீண்ட நாள் காதலியும், எழுத்தாளருமான நவமி லதாவை திருச்சூரில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நவமி லதா மலையாளத்தில் 'பூம்பாட்டவேட்டா' (Poombattavetta) என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

இவர் எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.