பிரித்தானியாவின் மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று, எதிர்வரும் 27ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.
சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கடிதம், 1936 முதல் 1940-க்கு இடைப்பட்ட காலத்தில் மகாராணி 10 முதல் 12 வயதிற்குள் இருந்தபோது எழுதப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்ட்சர் ரோயல் லொட்ஜின் தலைமைப் பணிப்பெண் பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு எழுதப்பட்ட இந்த ஒரு பக்கக் கடிதத்தில், நாய், குதிரை மற்றும் சிறு குழந்தைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
