காலை உணவினை 15 நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் ஏற்படும் ஆபத்தான் மாற்றங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மனிதர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் காலை உணவிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றது.
வேலைப்பளு, நேரமின்னை என நாம் பல காரணங்களை கூறிக்கொண்டு காலை உணவினை தவிர்த்தால், நமது உடல் ஆபத்தான பிரச்சனையை சந்திக்கும்.
உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மனதிலும் ரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் 15 நாட்கள் காலை உணவை தவிர்த்தால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை உணவினை நாம் தவிர்க்கும் போது மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் மன சோர்வு மற்றும் செறிவு குறைகின்றது. மேலும் எப்போதும் சோர்வாக இருப்பதுடன், தலைவலி மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது.
பலரும் காலை உணவை தவிர்த்தால் எடை இழப்பு ஏற்படும் என நினைக்கும் நிலையில், ஆனால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்குமாம்.
ஏனெனில் காலை உணவை தவிர்ப்பது மதியம் அல்லது இரவில் பசியை ஏற்படுத்தி அதிகமான உணவை எடுத்துக்கொள்ள காரணமாகின்றது. மேலும் கலோரிகளின் அளவும் அதிகரிக்கின்றது.
ரத்த சர்க்கரையில் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். உடல் ஆற்றலுக்காக முதலில் சேகரிக்கப்பட்டுள்ள கிளைகோஜனைப் பயன்படுத்துகின்றது.
பின்பு கொழுப்பை எரிக்கத் தொடங்கி எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றது. புரத குறைபாடு தடை இழப்பிற்கு வழிவகிக்கும்.
அமில பிரச்சனை, வாயு மற்றும் வயிறு வலி பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகின்றது.. இதனால் பெண்களுக்கு PCOS மற்றும் தைராய்டு போன்ற அபாயம் அதிகரிக்கின்றது.
காலை உணவை யார் தவிர்க்கவே கூடாது?
குழந்தைகள் மற்றும மாணவர்கள் காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மூளை வளர்ச்சியினை மேம்படுத்துகின்றது.
கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் என்பதால் காலை உணவை தவிர்க்கக்கூடாது.
வயதானவர்கள் கட்டாயம் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை பலவீனத்தைக் குறைத்து ஊட்டச்சத்து குறைபாட்டை நிரப்பும்.
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் காலை உணவு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகும்.
