வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரியும், ரயில்வே பணியிடக் குறைப்பைக் கைவிடக்கோரியும் விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிஸ்ட்) கட்சிகள் நாளை (மே 7) மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை அடுத்து, வணிக சிலிண்டர் விலை ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
