விலை மாற்றம் அடைந்த எரிபொருள்

 


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளன.

பிரென்ட் மசகு எண்ணெய் விலை 3.8% சரிந்து ஒரு பீப்பாய் 95.54 டொலராக வர்த்தகமானது. அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் 6.1% சரிந்து 92.85 டொலராக உள்ளது.

வார இறுதியில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட ட்ரம்ப் உத்தரவிட்டதால் கடந்த திங்கட்கிழமை விலை 100 டொலரைத் தாண்டியது.

ஆனால், தற்போது பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பால் விலை குறைந்துள்ளது.