உங்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கா? இதோ உடனடி நிவாரணம்

 


பொதுவாக 28லிருந்து 35 நாட்களுக்குள் மாதம் ஒருமுறை பூப்படைந்த மற்றும் பருவமடைந்த பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஆரோக்கியமான உடல் உயிரியல் நிகழ்வே மாதவிடாய் ஆகும்.


35 நாட்களுக்கு மேல் அல்லது 21 நாட்களுக்கு கீழே அடிக்கடி மாதவிடாய் ஏற்பட்டாலோ மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.


இதுதவிர 7 நாட்களுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தாலும் மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.


இந்த பதிவில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் Mensovit Plus மாத்திரையின் பயன்கள், பக்கவிளைவுகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆயுர்வேத கலவைகளால் ஆன Mensovit Plus மாத்திரைகளில் Aristolochia Bracteata மற்றும் Ferula Asafoetida நிறைந்துள்ளது.


இதில் Aristolochia Bracteata கருப்பை தொடர்பான பிரச்சனைகளையும், Ferula Asafoetida மாதவிடாயின் போது ஏற்படும் அதீத ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.


பெரும்பாலும் மாதவிடாய் உடனே வருவதற்கு Mensovit Plus மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.


இதுதவிர பெண்களுக்கான சிறுநீரக பாதைத் தொற்று, மாதவிடாயின் போது வலியுடன் கூடிய அதீத ரத்தப்போக்கு, பிறப்புறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

மிக முக்கியமாக காரணமின்றி கருகலைவதை தடுப்பதற்கும், குறைபிரசவம் ஆவதை தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பக்கவிளைவுகள்

குமட்டல்

வாந்தி

தலைவலி

அடிவயிற்றில் வலி

அடிவயிற்றில் தசைப்பிடிப்பு

இது பொதுவான பக்கவிளைவுகளாகும், இதைதவிர வேறு சில பக்கவிளைவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?


தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கள் ஆலோசனையின்றி Mensovit Plus மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.


சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும் Mensovit Plus மாத்திரைகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.