உச்சம் தொட்ட தங்கம் விலை

 




சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


​உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதிய முதலீடுகளே இந்த விலை அதிகரிப்புக்கு (Safe-haven assets) காரணமாக அமைந்துள்ளது.


​அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,830.68 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.


​சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.