தென் சீனாவில் பெய்து வரும் கனமழை, அந்நாட்டின் தென்பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹெபெய் (Hebei) மாகாணத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், பொம்மைகளை போல கார்கள் அடித்து செல்லப்படும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
