மட்டன் மிளகு வறுவல்.... ஒருமுறை மட்டும் இப்படி செய்து பாருங்க


 

மட்டன் வாங்கினால் ஒருமுறை மிளகு வறுவல் இப்படி செய்து கொடுத்தால், ஒட்டுமொத்த குடும்பமும் ருசித்து சாப்பிடுவார்கள். குறித்த வறுவலை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் மட்டனுக்கு எப்பொழுதும் தனி இடம் இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது.

ஆதலால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். பொதுவாக மட்டனை குழம்பு, கிரேவி, வறுவல், சுக்கா என்று சமைத்து சாப்பிட்டிருப்போம்.

ஒரே ஒருமுறை மட்டன் வாங்கினால் மட்டன் மிளகு வறுவல் செய்து சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அட்புட்டு ருசியாக இருக்குமாம். இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் மட்டன் மிளகு வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு...

இஞ்சி - 1 இன்ச்

பூண்டு - 7 பல்

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - சிறிது

சின்ன வெங்காயம் - 5

தேங்காய் - 2 சில்லு

முந்திரி - 10

சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)

மிளகு - 1 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

அன்னாசிப்பூ - 1 இதழ்

காஷ்மீரி வரமிளகாய் - 1 

வறுவல் தாளிப்பதற்கு...

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 25

சீரகம் - 2 சிட்டிகை

சோம்பு - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

மட்டன் - 3/4 கிலோ

அரைத்த விழுது

தண்ணீர் - சிறிது

செய்முறை

முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்னவெங்காயம், தேங்காய், முந்திரி, சிறிய தக்காளி சேர்க்கவும்.

மேலும் அதில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் காஷ்மீர் வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் சேர்த்து கொத்தமல்லியை சிறிதளவு தூவி வதக்கிவிடவும். தொடர்ந்து மட்டனை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அரைத்த மசாலா விழுதை சேர்த்து கிறறிவிட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 5 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். பின்பு கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான மட்டன் மிளகு வறுவல் தயார்.



Post a Comment