அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... சமூக வலைதளங்களில் பரபரப்பு


 

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

அவரது அரசியல் நடவடிக்கைகள், நிர்வாக முடிவுகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளைத் தாண்டி அவர் வெளிப்படுத்தும் இயல்பான அணுகுமுறை, எளிமையான நடத்தை மற்றும் கலகலப்பான தருணங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், அவ்வப்போது பேசுபொருளாகவும் மாறிவருகின்றது.

இந்த நிலையில், வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதல்வர் விஜய்க்கு மின்சார காரின் சிறிய மாதிரி பொம்மையை (Miniature model) பரிசாக வழங்கினார்.

குறித்த மாதிரி காரை வாங்கியதும், விஜய் மிகவும் மகிழ்ச்சியுடன் அதன் கதவுகளைத் திறந்து, நுணுக்கங்களை வியந்து சிறு குழந்தையைப் போல விளையாட்டாகப் பரிசோதித்த விஜய் வெளிப்படுத்திய ஒரு இயல்பான தருணம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவரது எளிமையான அணுகுமுறையும், இயல்பான செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.



Post a Comment