மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்தெந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூலை மாதம் முழுவதும் இருப்பார். அதன் பின் ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார்.
இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். செவ்வாய் புதனின் ராசிக்கு செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
ஆனால் 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும்.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது.
நிதி நிலைமை மேம்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
புதிய வருமான வழிகள் உருவாகும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
