புதன் நேர்கதி - சனி வக்ரம் : ஜூலை இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!


 

ஜோதிடக் கணிப்பின்படி, ஜூலை மாதத்தின் கடைசி வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம், இந்தக் காலகட்டத்தில் நீதியின் கடவுளாக அறியப்படும் சனி பகவான் மற்றும் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் ஆகிய இரண்டு முக்கிய கிரகங்களின் நிலைகளில் முக்கிய மாற்றம் நிகழவுள்ளது.

அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு காரணியாகக் கருதப்படும் புதன் பகவான், ஜூலை 24 ஆம் தேதி தனது வக்ர நிலையிலிருந்து நிவர்த்தி பெற்று நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார்.

இதைத் தொடர்ந்து, ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்க உள்ளார்.

அடுத்தடுத்து நடைபெறும் இந்த இரண்டு முக்கிய கிரக நிலை மாற்றங்களும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

ஜூலை இறுதியில் சனி மற்றும் புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் எந்த வேலையையும் உற்சாகத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்து முடிப்பதற்கான ஆர்வம் ஏற்படும்.

பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். 

ஏற்கனவே செய்த முதலீடுகளிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.இதன் மூலம் நிதி நிலை மேலும் வலுவடையும். சிலருக்கு புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகலாம்.

சிம்மம்

ஜூலை இறுதியில் சனி மற்றும் புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

குறிப்பாக வருமானம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டும் சூழல் உருவாகும்.

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிகம்

ஜூலை இறுதியில் சனி மற்றும் புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டம் தொடங்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைத்து, பணப் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

வணிகத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலைப்பளு அதிகரித்தாலும், அதே நேரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். 

Post a Comment