விஜய் பதவி ஏற்காமல் போகலாம்- மீண்டும் ஒரு தேர்தல் வர பெரும் வாய்ப்புகள் உள்ளது !

 


இங்கே நாம் சொல்லும் விஷயங்களை மிகவும் கவனமாக வாசியுங்கள். பல விஷயங்கள் புரியும். மார்ச் மாதம் 12-ஆம் தேதி அன்று, ஆளுநர் அரலீக்கரைத் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராக டெல்லி நியமிக்கிறது. ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்படுகிறார். அது ஏன்? கேரளாவின் ஆளுநராக இருக்கும் அரலீக்கரைத் தற்காலிகமாகத் தமிழ்நாட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு டெல்லி கூறுகிறது; அது ஏன்? மார்ச் மாதம் 12-ஆம் தேதி, அதாவது தேர்தல் நடைபெற ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த விஷயம் நடக்கிறது.

மத்திய உளவுத்துறை அறிக்கை மற்றும் மாநில உளவுத்துறையின் அறிக்கையின்படி மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்ட ஒரே விஷயம், தொங்கு சட்டமன்றம்; யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான். இதேவேளை விஜய் அவர்கள் பல இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதும் அதில் இருந்தது. இதனால்தான் பிஜேபி (BJP) அரசு அதிமுகவை வைத்து எப்படியாவது விஜய்யைத் தமது கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அது பலிக்கவில்லை. ‘ஜனநாயகன்’ படத்தைத் தடை செய்தது, கரூர் விவகாரத்தில் விஜய்யைத் டெல்லிக்கு அழைத்து சிபிஐ (CBI) மிரட்டியது எனப் பல நடந்தும் விஜய் அடிபணியவில்லை.

இந்த நிலையில் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தால், வெற்றி பெற்ற கட்சி நிச்சயமாகச் செல்ல வேண்டிய இடம் எது? அது ஆளுநர் மாளிகை. ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தைக் கொடுக்க வேண்டும். எனவே, அண்டை மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆளுநரை நியமித்தால், அவர் இரண்டு மாநிலங்களையும் கவனிக்க வேண்டி இருக்கும். இதனைக் காரணம் காட்டியே அவர் கேரளாவில் தங்கி விடலாம் அல்லது தமிழ்நாடு வருவதைக் குறைத்துக் கொள்ள முடியும். அப்படி என்றால் விஜய்யால் ஆளுநரைச் சந்திப்பது கடினமாகும் அல்லவா

கம்யூனிஸ்டுகளின் இந்தத் திடீர் மன மாற்றத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகளின் மாற்றத்திற்கும் என்ன காரணம் என்பது சிதம்பர ரகசியம். இதற்குப் பின்னால் நிச்சயம் பிஜேபி இருக்கிறது என்பது உண்மை. இதே நிலை நீடித்தால் மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு புதிய தேர்தல் நடக்கும் சூழல் உருவாகலாம். ஆனால் அந்தத் தேர்தலில் விஜய் முன்பை விட அதிக வாக்குகளை வாங்குவார் என்பது உறுதி. காங்கிரஸ் கட்சி த.வெ.க-வோடு இணைந்தது மட்டுமல்லாமல், 2029-ல் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எட்டியது, மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்குப் பெரும் எரிச்சலை ஊட்டியுள்ளது. இதனால்தான் பிஜேபி அரசு, மக்கள் ஆணை பெற்ற விஜய்யைப் பதவியேற்க விடாமல் தடுக்கிறது. தனது அதிகாரத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் பயன்படுகிறது


Post a Comment