தங்கம் விலை ரூ.1,840 கிடுகிடு உச்சம்

 


தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு இன்று ரூ.1,840 கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று (மே 5) ஒரு சவரன் ரூ.110,560-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.112,400-க்கு விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,050-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Post a Comment